ஐபிஎல் கிரிக்கெட் தொருவிழாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இப்போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் ரஸ்ஸி வெண்டர் டுசென், குல்தீப் சென் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் லக்னோ அணியில் மார்கஸ் டோய்னிஸ், துஷ்மந்தா சமீரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், ரஸ்ஸி வான்டெர் டுசென், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், குல்தீப் சென், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கே), குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.