ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் டிம் டேவிட், குமார் கார்த்திகேயா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ராஜஸ்தான் அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டொம் டேவிட், கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரோன் ஹெட்மியர், டேரில் மிட்செல் , ரியான் பராக், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.