ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அனி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கே), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன், டிம் சவுத்தி, பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி
மும்பை இந்தியன்ஸ் : இஷான் கிஷன், ரோஹித் சர்மா(கே), திலக் வர்மா, ரமன்தீப் சிங், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்