15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணி ரூதர்ஃபேர்டிற்கு பதிலாக கிளென் மேக்ஸ்வேல் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல் மும்பை அணியில் உனாட்கட், ராமந்தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ராமன்தீப் சிங், முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனத்கட், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.