ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி ஹைதராபாத் அணியிம் 3 மாற்றங்களும், டெல்லி அணியில் நான்கு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், மன்தீப் சிங், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கே), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ரிபால் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிச் நோர்ட்ஜே
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஸ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், சீன் அபோட், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக்.