16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் கேல் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் காயம் அடைந்தார். பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாளை மும்பை செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வருகிறார். மேலும் அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிபோட்டியில் கே.எல். ராகுல் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.