16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குஜராத், சென்னை அணிகள் ஏற்ழத்தால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமுள்ள இரு இடங்களை பிடிக்க மற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர்.
அந்தவரிசையில் இன்று நடைபெறும் 60ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இப்போட்டியில் வெல்லும் அணிக்கே பிளே ஆஃப் சுற்றுக்காக வாய்ப்பு உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (வ), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்