16அவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் சீசனின் முதல் பாதி லீக் போட்டிகள் முடிந்துள்ளடதால், புள்ளிப்பட்டியளில் முன்னேறுவதற்காக அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இன்றைய போட்டிக்கான டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிகான ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம் கேகேஆர் அணியில் குல்வந்திற்கு பதிலாக அபினவ் அரோரா சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: என் ஜெகதீசன், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வைஸ், வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (கே), ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, விஜய்குமார் வைஷாக், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.