ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வார இறுதியான இன்று ஐபிஎல் லீக் போட்டிகளில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தொடரின் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் பிரியாம் கார்க் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஹைதராபாத் அணியில் அகில் ஹொசைன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென்,அபிஷேக் சர்மா, அப்துல் சமத், அகேல் ஹொசைன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.
டெல்லி கேப்பிடல்ஸ்: டேவிட் வார்னர்(கே), பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனிஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்ஸர் படேல், ரிபால் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்..