ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது. இதில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரசைர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.
ஹைதராபாத்திலுள்ளா ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், உம்ரான் மாலிக், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார்(கே), டி நடராஜன், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.