ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்.