ஐபிஎல் 2024: டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி…
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த மாற்றமும் இன்றி இப்போட்டியில் களமிறங்குகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது.
சிஎஸ்கே உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கே), அஜிங்கியா ரஹானே,டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதிசா பதிரனா.