இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத் அணி தரப்பில் எந்த மாற்றங்கள் செய்யப்படவில்லை.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ரிஷப் பந்த் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கே), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.