இந்தியாவில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் மகேஷ் தீக்ஷனாவுக்கு பதிலாக மதீஷா பதிரனா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான்.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோஹித் சர்மா.