ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கே), ரமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், அல்ஸாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.