விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நவீன் உல் ஹக்கிற்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் கேகேஆர் அணியில் ரிங்கு சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(கே), தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கே), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.