இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்த அணிகள் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் இன்று நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷான், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கே), நெஹால் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல். ராகுல்(கே), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், மயங்க் யாதவ்.