ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டேவிட் வார்னர், குமார் குஷாக்ரா ஆகியோர் நீக்கப்பட்டு கேப்டன் ரிஷப் பந்த், குல்பதின் நைப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மறுபக்கம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அர்ஷத் கான், யுத்விர் சிங் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: அபிஷேக் போரல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஷாய் ஹோப், ரிஷப் பந்த்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்பதின் நைப், ரசிக் தார் சலாம், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், கலீல் அஹ்மத்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல்(கே), குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், குர்னால் பாண்டியா, யுத்வீர் சிங் சரக், அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்.