இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் அறிமுக வீரர் வில் ஜேக்ஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இரு அணிகளுக்கும் சரிவர அமையவில்லை. இதில் ஆர்சிபி அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதேசமயம் மறுபக்கம் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கே), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்.