ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் பிரித்வி ஷாவும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெரால்ட் கோட்ஸியும் பிளேயிங் லெவனில் நீக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், குமார் குஷாக்ரா, ஷாய் ஹோப், ரிஷப் பந்த்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், லிசாத் வில்லியம்ஸ், முகேஷ் குமார், கலீல் அகமது.
மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, நெஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா(கே), டிம் டேவிட், முகமது நபி, பியூஷ் சாவ்லா, லூக் வுட், ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.