17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரர் அன்ஷுல் காம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி நடராஜன்.
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.