17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 33அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டு ரைலீ ரூஸோவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்: ரிலீ ரூஸோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கரன்(கே), ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கே), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா.