ஐபிஎல் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நீக்கப்பட்டு, துஷ்மந்தா சமீரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ், ராகுல் சஹார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர்(கே), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், துஷ்மந்த சமீரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா
பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன்(கே), ரிலீ ரோசோவ், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.