ஐபிஎல் 2024: டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதன்படி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக…
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதன்படி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு பதிலாக ரிச்சர்ட் கிளீசன், ஷர்தூல் தாக்கூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன்(கே), ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கே), டேரில் மிட்செல், மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (வ), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ரிச்சர்ட் க்ளீசன், முஸ்தாஃபிசூர் ரஹ்மான்.