இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான டெல்லி அணியில் குல்பதின் நைபும், ராஜஸ்தான் அணியில் டோனவன் ஃபெரீராவும் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்பாடின் நைப், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், டொனவன் ஃபெரீரா, ரோவ்மன் பாவல், ஷுபம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.