ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்ககியது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவரும் வகையில் நடப்பு சாம்பியனான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல போராடிவரும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இப்போட்டிக்கான ஆர்சிபி அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல், அல்ஸாரி ஜோசப் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்.
அதேசமயம் இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் அதிரடி வீரர் சமீர் ரிஸ்வின் இன்றைய போட்டியின் மூலம் தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), விராட் கோலி, ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கர்ன் ஷர்மா, அல்ஸாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட் (கே), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.