ஐபிஎல் 2024: டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி பந்துவீச்சு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டிவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
அதன்படி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக…
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டிவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
அதன்படி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் கேமரூன் க்ரீன், முகமது சிராஜ் மற்றும் கரண் சர்மா ஆகியோ சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கேகேஆர் அணியில் அந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது சிராஜ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட், சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர்(கே), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.