ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்றுக்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அண்ணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சம பலம் வாய்ந்த இரண்டு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பாவெல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ்(கே), புவனேஷ்வர் குமார், டி நடராஜன்.