இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன.
அதன்படி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கே), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ்(கே), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, நடராஜன்.