ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, முன்னாள் சாம்பியன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே இத்தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளதால், இந்த போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட்(கே), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்..