ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மயங்க் யாதவிற்கு பதிலாக யாஷ் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர்(கே), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல்(கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்