
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத இரு அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் வெற்றிபெற்ற லெவனுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்
இம்பேக்ட் வீரர்: ரசிக் சலாம், மனோஜ் பந்தேஜ், டிம் சீஃபர்ட், ஸ்வப்னில் சிங், சுயாஷ் சர்மா.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
இம்பேக்ட் வீரர்: பிரப்சிம்ரன் சிங், பிரவீன் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், ஹர்பிரீத் ப்ரார்