
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய ஆழைத்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், அஸ்மதுல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
இம்பேக்ட் வீரர்கள்:
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரோஹித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ரீஸ் டாப்லி
இம்பேக்ட் வீரர்கள்: அஷ்வனி குமார், கிருஷ்ணன் ஸ்ரீஜித், ரகு ஷர்மா, ராபின் மின்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ்