ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் பெரிய தொகையில் ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போலவே பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஷாருக் கானைத் தேர்வு செய்தது. அதேபோல் ராகுல் திவேட்டியா 9 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி வாங்கியது.
1) ஷாபாஸ் அகமது - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 2.40 கோடி ரூபாய்
2) ஹர்ப்ரீத் ப்ரார் - பஞ்சாப் கிங்ஸ், 3.80 கோடி ரூபாய்
3) சர்ஃபராஸ் கான் - டெல்லி கேப்பிடல்ஸ், 20 லட்சம் ரூபாய்
4) ஷாருக் கான் - பஞ்சாப் கிங்ஸ், 9 கோடி ரூபாய்
5) சிவம் மாவி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 7.25 கோடி ரூபாய்
6) கமலேஷ் நாகர்கோடி - டெல்லி கேபிடல்ஸ், 1.10 கோடி ரூபாய்
7) ரியான் பராக் - ராஜஸ்தான் ராயல், 3.80 கோடி ரூபாய்
8) அபிஷேக் சர்மா - சுர்னிசர்ஸ் ஹைதராபாத், 6.50 கோடி ரூபாய்
9) ராகுல் தெவாடியா - குஜராத் டைட்டன்ஸ்,9 கோடி ரூபாய்