அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டி தொடங்கும் முன் மழை பெய்த காரணத்தால் டாஸ் தாமதமானது.
அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
இன்றையப் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக உம்ரான் மாலிக் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். அதேபோல் நீண்ட நாள்களாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அயர்லாந்து அணியில் கோனார் ஓல்பெர்ட் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), கரேத் டெலானி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், ஆண்டி மெக்பிரைன், கிரேக் யங், ஜோசுவா லிட்டில், கோனார் ஓல்பர்ட்
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.