தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆபிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டக்ரெல், மார்க் அடேர், ஆண்டி மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர்(கே), வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மஹாராஜ், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.