ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் கேகேஆர் அணி இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 9ஆம் இடத்திலும் உள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
கிரிக்கெட்: Tamil Cricket News