ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் மனன் வோரா, எவின் லூயிஸ், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கொல்கத்தா அணியில் அபிஜித் தோமர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், அபிஜீத் தோமர், ஸ்ரேயாஸ் ஐயர்(கே), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(கே), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்ப கவுதம், மொஹ்சின் கான், அவேஷ் கான், ரவி பிஷ்னாய்.