நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஹாக்கில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
நியூசிலாந்து : மார்ட்டின் கப்டில், ஃபின் ஆலன், மிட்செல் சான்ட்னர் (கே), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டெனே கிளீவர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, பென் சியர்ஸ், பிளேயர் டிக்னர்
நெதர்லாந்து: ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), விக்ரம்ஜித் சிங், லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், ரியான் க்ளீன், ஷாரிஸ் அகமது, கிளேட்டன் ஃபிலாய்ட்.