நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ்(கே), கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, வில் யங், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர்(கே), ஆடம் மில்னே, லோக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட், பென் சியர்ஸ்.