பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நியூசிலாந்து : ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர்(கே), ஆடம் மில்னே, மேட் ஹென்றி, டிம் சௌதீ, லோக்கி ஃபர்குசன்.
பாகிஸ்தான் : சைம் அயூப், முகமது ரிஸ்வான், பாபர் ஆசம், ஃபகார் ஸமான், சாஹிப்ஜாதா ஃபர்ஹான், இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி(கே), முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப், ஸமான் கான்.