நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமீர், உஸ்மான் கான் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து: டிம் செய்ஃபெர்ட், டிம் ராபின்சன், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல்(கே), ஜோஷ் கிளார்க்சன், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, பென் சியர்ஸ், பென் லிஸ்டர்
பாகிஸ்தான்: பாபர் ஆசாம்(கே), சைம் அயூப், முகமது ரிஸ்வான், உஸ்மான் கான், இஃப்திகார் அகமது, இர்பான் கான், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர், அப்ரார் அகமது.