பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அதன்படி ராவல் பிண்டியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நியூசிலாந்து: டிம் செய்ஃபெர்ட், டிம் ராபின்சன், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல்(கே), ஜோஷ் கிளார்க்சன், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, பென் சியர்ஸ், பென் லிஸ்டர்
பாகிஸ்தான்: பாபர் ஆசாம்(கே), சைம் அயூப், முகமது ரிஸ்வான், உஸ்மான் கான், இஃப்திகார் அகமது, இர்பான் கான், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர், அப்ரார் அகமது.