வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்தானில் நடந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 127 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அமீர் ஜாங்கூவும், பாகிஸ்தான் அணியில் காஷிப் அலியும் அறிமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.
ஏற்கெனவே பாகிஸ்தன் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: கிரேக் பிராத்வைட் (கே), மைக்கேல் லூயிஸ், அமீர் ஜாங்கூ, காவேம் ஹாட்ஜ், அலிக் அதானாஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், டெவின் இம்லாச், கெவின் சின்க்ளேர், குடகேஷ் மோட்டி, கேமர் ரோச், ஜோமல் வாரிகன்
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத்(கே), முஹம்மது ஹுரைரா, பாபர் ஆசாம், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, சஜித் கான், நோமன் அலி, காஷிப் அலி, அப்ரார் அகமது.