கரோனா அச்சுறுத்தல் காரணமாக அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.
இதில் ஒரு சாம்பியன் பட்டத்தை வென்ற பெஸ்வர் ஸால்மி அணி, இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்கொளிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி அணி முதலில் முல்தான் சுல்தான்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
பெஸ்வர் ஸால்மி (விளையாடும் லெவன்): ஹஸ்ரதுல்லா ஸஸாய், கம்ரான் அக்மல், ஜொனாதன் வெல்ஸ், சோயிப் மாலிக், ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், அமத் பட், வஹாப் ரியாஸ் (கே), சமீன் குல், முகமது இர்ஃபான், முகமது இம்ரான்.
முல்தான் சுல்தான்ஸ் (விளையாடும் லெவன்): ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கே), சோஹைப் மக்சூத், ரிலே ரோசோவ், ஜான்சன் சார்லஸ், குஷ்டில் ஷா, சோஹைல் தன்வீர், இம்ரான் தாஹிர், முசராபானி, இம்ரான் கான், ஷான்நவாஸ் தானி.