பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டன் முகமது நவாஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடவுள்ளது.
முல்தான் சுல்தான்ஸ்: உஸ்மான் கான், முகமது ரிஸ்வான்(கே), ரைலீ ரூசோவ், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், குஷ்தில் ஷா, அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அப்ரிடி, இஷாருல்ஹக் நவீத், இஹ்சானுல்லா.
குயிட்டா கிளாடியேட்டர்ஸ்: ஜேசன் ராய், மார்ட்டின் கப்தில், ஒமைர் யூசுப், முகமது ஹபீஸ், இஃப்திகார் அகமது, உமர் அக்மல், முகமது நவாஸ்(கே), கைஸ் அகமது, உமைத் ஆசிப், நவீன்-உல்-ஹக், அய்மல் கான்.