ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரயால்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் கைல் ஜேமிசனுக்கு பதிலாக ஜார்ஜ் கார்டன் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கார்த்திக் தியாகி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா,கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.