தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - எம் ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான கேப்டவுன் அணியில் ஒல்லி ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எம்ஐ கேப் டவுன்: டெவால்ட் ப்ரீவிஸ், ரியான் ரிக்கல்டன், ராஸ்ஸி வான் டெர் டுசென், கிராண்ட் ரோலோஃப்சென், சாம் கரன், ஜார்ஜ் லிண்டே, டெலானோ போட்ஜிட்டர், ஒடியன் ஸ்மித், ரஷித் கான்(கே), காகிசோ ரபாடா, ஒல்லி ஸ்டோன்
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: சரேல் எர்வீ, ஆடம் ரோசிங்டன், ஜேஜே ஸ்மட்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரோலோஃப் வான் டெர் மெர்வே, மார்கோ ஜான்சன், ஜேம்ஸ் புல்லர், சிசண்டா மாகலா, ஒட்னியல் பார்ட்மேன.