தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டர்பனில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியிலும் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்ஸர் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஆடம் ஸாம்பா அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்செனுக்கு பதிலாக ஜார்ன் ஃபோர்டுயின் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான்டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கே), டெவால்ட் ப்ரீவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜார்ன் ஃபோர்டுயின், ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி இங்கிடி, லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ்(கே), ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.