தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகாளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மீண்டும் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ரமந்தீப் சிங் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றுள்ளர்.
இத்தொடரில் இரு அணிகளும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிப்பதன் காரணமாக, இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் வாய்ப்பை பெறுவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பையும் பெறும். மேற்கொண்டு இரு அணியில் உள்ள பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஃபார்ம்மில் இருப்பதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தியா பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், ராமன்தீப் சிங், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ், லூத்தோ சிபம்லா